Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சூரசந்த்பூர் » வானிலை

சூரசந்த்பூர் வானிலை

சூரசந்த்பூருக்கு சுற்றுலா வர மிகச்சிறந்த காலமாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் உள்ளன. இந்நாட்களில் மழை குறைந்து, குளிர் காலம் தொடங்கும். பள்ளத்தாக்குகளும், மழைகளும் புதிய பரிணாமங்கைள சூடிக் கொண்டும், சாலைகள் வாகனங்கள் ஓட்ட வசதிகயாகவும் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுசூழலும் ஊர் சுற்றிப் பார்க்க வசதியாகவும் இந்த பருவத்தில் மாறி விடும். எனவே, இந்த பருவத்தில் சூரசந்த்பூருக்கு வாருங்கள்! மகிழ்ந்திருங்கள்!

கோடைகாலம்

ஈரப்பதமாக இருந்தாலும் சூரசந்த்பூரின் கோடைக்காலம் இனிமையானதாக இருக்கும். இந்நாட்களில் சூரசந்த்பூரில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாக 37°C உள்ளது. வெப்பநிலை நம்மை தொந்தரவு செய்யுமளவிற்கு அதிகமாக செல்லாவிட்டாலும், வெப்பத்திலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்வது நல்லது தான்! சூரசந்த்பூரில் கோடைக்காலம் மே மற்றும் ஜுன் மாதங்களில் நிலவி வரும்.

மழைக்காலம்

மணிப்பூரின் இதர பகுதிகளில் கடுமையாகவும் மற்றும் அதிகமாகவும் இருக்கும் மழைப்பொழிவு சூரசந்த்பூரையும் விட்டு வைப்பதில்லை. ஜுன் மாதம் தொடங்கும் மழைக்காலம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் வரையிலும் கூட நீடித்திருக்கும். சூரசந்த்பூரில் பதிவு செய்யப்பட்ட சராசரி மழைப்பொழிவு 3080 மிமீ முதல் 597 மிமீ வரையிலும் உள்ளது. எனவே மழைக்காலத்தில் சூரசந்த்பூருக்கு சுற்றுலா வருவது கடினமான விஷயமாகும்.

குளிர்காலம்

குளிர்காலத்தில் 10°C வரையிலும் இறங்கி வந்து விடும் வெப்பநிலையால், சூரசந்த்பூரில் அதீத குளிர் நிலவுவதில்லை. நவம்பர் மாதத்தில் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரையிலும் நீடித்திருக்கும். வெப்பநிலை அவ்வளவாக குறைந்து போகாத பொழுதும், போதுமான அளவு கம்பளி ஆடைகளை எடுத்துச் செல்வது அத்தியாவசியமான விஷயமாகவே உள்ளது.