டால்பின் மூக்கு காட்சி மேடை பெயரைப்போலவே டால்பினின் மூக்கு போன்ற தோற்றமுடையது. இங்கு காணக்கிடைக்கும் காட்சிகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.
எனவே இது பயணிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய ஒரு இடமாக கருதப்படுகிறது. சிறிது தூரம் மலைப்பாதையில் பயணிக்க வேண்டி இருந்தாலும் , இது தரும் காட்சியமைப்புகள் அதற்கான தகுதிகளை உடைய இடம் தான் இது என்று கூற வைக்கிறது.
நீலகிரியின் பல முக்கிய இடங்களை இங்கிருந்து காணலாம். கோத்தகிரியின் கேத்தரின் நீர்வீழ்ச்சியும் அதில் ஒன்று. மலை உச்சியில் இருக்கும் போது கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்.
ஏனென்றால் பாறையின் இரு பக்கமும் அதல பாதாளமாகக் காணப்படுகிறது . இங்கிருந்து கிடைக்கும் காட்சிகள் காண்பவரைக் கட்டிப் போடுகிறது . டால்பின் மூக்கு காட்சி மேடை குன்னூரிலிருந்து 10 - 12 கி.மீ. தொலைவில் டைகர் ஹில்ஸ் அருகாமையில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications