சிம்ஸ் பூங்கா குன்னூரின் பிரதான இடங்களில் ஒன்று. ஜே.டி.சிம் என்பவரின் பெயரால் நிறுவப்பட்ட இந்தப் பூங்கா ஒரு தோட்டக்கலை மையமாகும். ஜே.டி.சிம் மதராஸ் கிளப்பின் காரியதரிசியாக 1874ல் பணிபுரிந்தவர்.
இந்தப் பூங்கா அரிய வகைச் செடிகொடிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு , காண்பவர்க்கு ஆச்சரியத்தை தருகிறது. பன்னிரண்டு ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்கா ஆயிரத்துக்கும் அதிகமான தாவரங்களின் இருப்பிடமாக உள்ளது.
ஜப்பானிய முறைப்படி உருவமைக்கப் பட்டுள்ள இந்தப் பூங்காவில் கமேலியா , மக்னோலியா , பைன் போன்ற அரிய மரங்களும் பாதுகாக்கப் பட்டுள்ளன. குன்னூரின் குளிர்ச்சியான காலநிலையில் செழித்து வளரும் இம்மரங்கள் ஆண்டுமுழுவதும் ரசிக்கத் தக்க அழகுடன் காணப்படுகின்றன.
சிம்ஸ் பூங்காவின் மிகப்பெரிய ஈர்ப்பு ஆண்டுதோறும் இங்கு நடத்தப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் கண்காட்சி தான். சிம்ஸ் பூங்கா கடல் மட்டத்திலிருந்து 1780 மீட்டர் உயரத்தில் மேல் குன்னூரில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications