டச்சு கோட்டை கோவளத்தின் மற்றொரு முக்கியமான கண்கவர் இடம். இது வரலாற்று காதலர்களின் ஆர்வத்தை தூண்டக்கூடியது. கடற்கரையில் அமைந்துள்ள இந்த கோட்டையானது குடியேற்றத்தின் பாதுகாப்புக்கான ஒரு முக்கிய தலமாக டச்சு கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டது.
இந்த வரலாற்று நினைவு சின்னத்தை கட்டிய பெருமை டச்சு அரசாங்கத்தை சாரும் என்றாலும் அவர்கள் கோவளத்தை விட்டு சென்ற பின் இது பல்வேறு குடியேற்றங்களுக்கு புகலிடமாக இருந்துள்ளது.
இதனுடைய புகழ் மங்கி விட்டது என்றாலும் கூட கடந்த காலத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக அது இன்னும் நின்று கொண்டு, ஆண்டுதோறும் கோவளத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து கொண்டிருக்கிறது.
இந்த கோட்டைக்கு அருகாமையில் கடலோர குடில்கள், தங்குமிடங்கள் ஆகியவை காணப்படுகின்றன. சாலை வழியாக எளிதில் இந்த கோட்டைக்கு செல்ல முடியும். கோவளத்தில் இருக்கும் பட்சத்தில் இந்த கோட்டையை சென்றடைவது என்பது மிகவும் கடினமாக காரியம் அல்ல.



Click it and Unblock the Notifications