முத்துக்காடு காயல் நீர் பல நீர் விளையாட்டுகளுக்கு பேர்போன ஒரு இடமாகும். நீர்ச்சறுக்குதல், பாய்மர சறுக்கு போன்ற நீர் விளையாட்டுகளில் ஒருவர் தன்னால் இயன்ற அளவு தன்னை ஈடுபடுத்திகொள்ள முடியும்.
முத்துக்காடு சென்னையில் இருந்து 28 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். கோவளம் செல்லும் போது இந்த இடத்தை தவற விடக்கூடாது. கோவளத்தில் உள்ள முத்துக்காடு, நகரத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்தாலும், மாசு பற்றிய கவலை இல்லாமல் இயற்கையின் புகலிடமாக அமைந்துள்ளது.
தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினால் நன்றாக பராமரிக்கப்பட்டு சுற்றுலா நடவடிக்கைகள் கட்டுப்படுத்துப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் போது, பாய்மர படகு போட்டி முத்துக்காட்டில் நடைபெறுகிறது.
இது ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவு பார்வையாளர்களை முத்துக்காடு காயல் நீருக்கு ஈர்க்கிறது. இந்த பகுதியானது பல்வேறுபட்ட தாவர மற்றும் விலங்கின வகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் பசுமை மூலப்பொருட்களும், மாசற்ற பரந்த நீர் பரப்பையும் கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications