Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கடலூர் » வானிலை

கடலூர் வானிலை

மழைக்காலத்திற்குப் பிறகு வரும் குளிர்காலங்களில் கடலூருக்கு வருவது மிகவும் சிறந்ததாகும். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில் வெப்பநிலை சுற்றிப் பார்ப்பதற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். எனவே சுற்றுலாப் பயணிகள் இந்த காலத்தில் கடலூருக்கு சுற்றுலா வர திட்டமிடுவது மகிழ்ச்சியானதாகவும் மற்றும் நினைவுகூறத்தக்கதாகவும் இருக்கும்.

கோடைகாலம்

ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்கள் கடலூரின் கோடை காலங்களாகும். இந்த காலகட்டத்தில் வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸிலிருந்து 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

மழைக்காலம்

கடலூரின் மழைக் காலங்களான ஜுலை முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் கடலூர் மிகவும் அதிகமான மழையைப் பெற்று வருகிறது.

குளிர்காலம்

குளிர்காலத்தில் கடலூரின் பருவநிலை மிகவும் ரம்மியமானதாகவும் மற்றும் வெப்பம் குறைவாகவும் இருக்கும். இந்த காலகட்டத்தில் வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸில் இருந்து 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்கள் மிகவும் ரம்மியமானதாக இருக்கும். எனவே கடலூர் நகரத்திற்கு சுற்றுலா வர மிகவும சிறந்த நாட்களாக இந்த மாதங்கள் அறியப்படுகின்றன.