Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டல்ஹெளசி » வானிலை

டல்ஹெளசி வானிலை

டல்ஹெளசியில் வருடத்தின் பெரும்பாலான நேரங்கள் இதமான தட்பவெப்பநிலை நிலவுவதால் ஹிமாச்சல பிரதேசத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : டல்ஹெளசியின்  கோடைகாலங்களில்  வெப்பநிலை 15.5 டிகிரி செல்சியஸிலிருந்து 25.5 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே இருக்கும். சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய பயணத்தை இந்த காலகட்டத்தில் செய்தால் அவர்களால் இயற்கை நடைபயணத்தையும் (Nature Walk) அனுபவிக்க முடியும்.

மழைக்காலம்

(ஜீன் முதல் செப்டம்பர் மாதம் வரை) : டல்ஹெளசியின்  மழைக்காலம் ஆண்டுக்கு சுமர் 214 செமீ அளவிற்கு மழைப்பொழிவை கொடுக்கவல்லது. மழைக்காலங்களில் டல்ஹெளசியின் மலைப்பகுதிகள் மனம் மயக்கும் வசீகரத்தை கொண்டிருக்குமாதலால் சுற்றுலா பயணிகள் இந்த மாதங்களில் அதிகம் வந்திடுவார்கள்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை) : டல்ஹெளசியின் குளிர்காலத்தில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸிலிருந்து 1 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே இருக்கும். உயரமான இடத்தில் டல்ஹெளசி அமைந்துள்ளதால் இந்த காலங்களில் பனிப்பொழிவும் இருக்கும். எனவே இந்த காலகட்டங்களில் டல்ஹெளசிக்கு வரும் பயணிகள் கடினமான கம்பளி ஆடைகளையும், போர்வைகளையும் கொண்டு வருதல் நலம்.