பைலாடிலா எனும் இந்த அழகிய மலைப்பகுதி இங்கு நிரம்பியுள்ள இரும்புத்தாது வளத்திற்காக புகழ் பெற்றுள்ளது. ஒரு எருதின் திமில் போன்று இம்மலை காட்சியளிப்பதால் இந்த மலைக்கு இந்த பெயர் வந்துள்ளது. பைலாடிலா என்றால் ‘எருது திமில்’ என்பது பொருளாகும்.
ஒரு தொழில்நகரமாக இயங்கும் பைலாடிலா நகர்ப்பகுதியானது இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. இவை பச்சேலி, கிரந்துல் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ள ஆகாஷ் நகர் எனும் இடத்தில்தான் அதிக அளவில் இரும்புத்தாது நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது.
சுற்றிலும் பரந்து காணப்படும் இயற்கை காட்சிகளை இந்த மலையுச்சியிலிருந்து நன்றாக பார்த்து ரசிக்கலாம். இருப்பினும், இந்த இடத்திற்கு செல்வதற்கு இந்திய கனிம வளத்துறையின் அனுமதியை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications