Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தாராசுரம் » வானிலை

தாராசுரம் வானிலை

தாராசுரம் நகரை சுற்றிப் பார்க்க சிறந்த காலம் குளிர்காலம் தான். அதாவது நவம்பர், டிசம்பர், ஜனவரி போன்ற மாதங்களில் பயணம் செய்வது சிறந்தது.

கோடைகாலம்

வெப்ப மண்டலமான தாராசுரம் நகரில் கோடையில் வெப்பம் அதிகமாக காணப்படும். குறிப்பாக வெயில் காலமான ஏப்ரல், மே, ஜூன் போன்ற மாதங்களில் அதிகபட்ச வெயில் இருக்கும். சுமார் 40 டிகிரி வெப்பம் இருக்கும் கோடை காலத்தில், தாராசுரம் பயணம் செய்வதை தவிர்த்தல் நலம்.

மழைக்காலம்

மழைக்காலத்திலும் கூட தாராசுரம் அதிக அளவில் மழையை பெறுவதில்லை. ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சுமாரான மழைப் பொழிவை காண முடியும். இருப்பினும், கோடை காலம் போல் அல்லாமல், வெப்பம் குறைந்து காணப்படும்.

குளிர்காலம்

குளிர்காலங்களில் தாராசுரம் நகரில் சுமார் 22 முதல் 28 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும். ஆகையால், நவம்பர், டிசம்பர், ஜனவரி போன்ற சமயங்களில் வெப்பம் குறைந்து இதமாக இருக்கும்.