தியோகாரில் பாய்ந்து வரும் பெட்வா நதிக்கரையின் ஓரத்தில் அமைந்திருக்கும் தியோகார் கோட்டைக்கு அருகில் பல பழமையான ஜைன ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.
இந்த ஆலயங்கள் 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்று சொல்லப்படுகின்றன. இவ்வாலயங்கள் தியோகார் கோட்டைக்குள்ளும் வெளியேயும் உள்ளன. இவை பண்டைய இந்தியாவின் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
இந்த ஜைன ஆலயங்களில் இருக்கும் சுவர்களில் ஜைன சமயத்தைச் சார்ந்த வரைபடங்கள், புராணம் மற்றும் ஜைன கலாச்சாரம் போன்றவை வரையப்பட்டுள்ளன. இவை சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டவை.
ஜைன ஆலயங்கள் தற்போது இந்து சமய ஆலயங்களாக மாற்றப்பட்டுள்ளன என்று இந்திய ஆர்க்கியாலஜிக்கல் சர்வே (எஎஸ்ஐ) 31 கூறுகிறது. இந்த ஆலயங்கள் கட்டப்பட்ட காலத்தை வைத்து இவை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
அதாவது முன் மத்திய காலமான 850 முதல் 950 ஆண்டுகள் வரை என்றும், பின் மத்தியகாலமான 950 முதல் 1150 ஆண்டுகள் வரை என்றும் பிரிக்கப்படுகின்றன.
தியோகாரில் இருக்கும் ஜைன ஆலயங்கள் ஜைன சமய மக்களின் ஆன்மீகத்தலங்களாக விளங்கி வருகின்றன. அதோடு பல ஆராய்ச்சியாளர்களும் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications