பெட்வா ஆற்றுக்குச் செல்ல முக்கிய கணவாயாகவும், அகழ்வாராய்ச்சியின் மையமாகவும் இந்த நாகர் கணவாய் விளங்குகிறது. நாகர் என்றால் படகு என்று பொருள். நாகர் கணவாய், தியோகார் கோட்டையின் கிழக்குப் பக்கம் அமைந்திருக்கிறது.
இந்த கணவாயிலிருந்து பெட்வா ஆற்றுக்கு செங்குத்தாக படிக்கட்டுகள் செல்கின்றன.இந்த கணவாய் கோட்டையின் சுவற்றுக்கும் ஆற்றுக்கும் இடையில் கட்டப்பட்டிருக்கிறது.
நாகர் கணவாயின் மேல் பகுதியில் குப்தர்கள் கால சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. மேற்சொன்ன கணவாய்களில் நாகர் கணவாய் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications