Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தம்தரி » வானிலை

தம்தரி வானிலை

தம்தரி நகர்ப்பகுதி மற்றும் மாவட்டமானது வெப்ப மண்டல பருவநிலையை பெற்றுள்ளது. கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவை மூன்று முக்கியமான பருவ காலங்களாகும். கோடைக்காலத்தில் அதிக வறட்சி நிலவுவதால் இது சுற்றுலாவுக்கு ஏற்றதாக இல்லை. குளிர்காலத்திலும் வறட்சி காணப்பட்டாலும் இனிமையான இதமான சூழல் நிலவுகிறது. பொதுவாக குளிர்காலமே இந்த தம்தரி மாவட்டத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.

கோடைகாலம்

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் இங்கு  கோடைக்கால மாதங்களாக உள்ளன. இக்காலத்தில் அதிகபட்சம் 42°C வரையிலும், குறைந்தபட்சம் 28°C வெப்பநிலையும் காணப்படுகிறது. கீழே குறையாமல் பகலில் வெப்பநிலை நிலவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கோடைக்காலம் தம்தரி மாவட்டத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக இல்லை.

மழைக்காலம்

ஜுன் முதல் ஆகஸ்ட் வரை இப்பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது. மழைக்காலத்தில் இங்கு மிதமான மழைப்பொழிவு நிலவுகிறது. வெப்பநிலையும் படிப்படியாக குறைந்து காணப்படும். இந்த பருவமும்கூட தம்தரி மாவட்டத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.

குளிர்காலம்

செப்டம்பர் மாதத்தில் துவங்கி பிப்ரவரி வரை இங்கு குளிர்காலம் நீடிக்கிறது. குளிர்காலத்தில் சராசரியாக 13°C  வெப்பநிலையில் துவங்கி 27°C  வரை வெப்பநிலை நிலவுகிறது. இதுவே தம்தரி மாவட்டத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்த பருவமாக உள்ளது.