கடல் மட்டத்திலிருந்து 2934மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த ஏரி காங்க்ராவில் மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சமாகும். தௌலதார் மலைத்தொடரிலிருந்து பனி உருகி ஓடி வரும் நீர் இந்த ஏரியில் நிரம்புகிறது.
தர்மஷாலாவிலிருந்து 9கி.மீ தூரத்திலுள்ள இந்த ஏரியிலிருந்து தௌலதார் மலைத்தொடரை நோக்கி செல்லும் இயற்கைக்காட்சிகள் நிரம்பிய ஒரு மலை நடைப்பாதை வெகுவாக பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
ஏரிக்கு அருகிலேயே உள்ள கரேரி என்ற கிராமத்தின் பெயரில்தான் இந்த ஏரி அழைக்கப்படுகிறது. தௌலதார் மலைத்தொடர் மற்றும் மன்கியானி சிகரம் போன்ற மலைகளை இந்த ஏரிப்பகுதியிலிருந்து நன்றாக ரசிக்கமுடிவது ஒரு விசேஷம்.
கேரா எனும் இடத்திலிருந்து 3கி.மீ மலையேற்றம் செய்து பயணிகள் இந்த ஏரிப்பகுதியை வந்தடையலாம். 13 கி.மீ நீளமுடைய மற்றொரு நீண்ட மலைப்பாதையொன்றும் கரேரி கிராமத்திலிருந்து இந்த ஏரிக்கு செல்கிறது.



Click it and Unblock the Notifications