கற்கோயிலான குணால் பத்ரி, பார்வையாளர்களுக்கு இனிமையான சுற்றுலாவை வழங்குவதில் நிகரில்லாமல் இருக்கிறது. காங்க்ராவிலுள்ள கோட்வலி பஜாரிலிருந்து 3 km தொலைவில் உள்ளது.
கிராமிய கதைகளின் படி, ஈரமான புனிதக்கல் இருப்பதாகவும், அக்கல் காய ஆரம்பிக்கும் போது, இங்கு மழை பெய்ய ஆரம்பிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்துக்கடவுளான துர்க்கைக்கு அர்பணிக்கப்பட்ட இக்கோவிலானது, பல்வேறு பக்தர்களால் தினமும் வணங்கப்படுகிறது.
தேவி சதியின் முக்கிய அவதாரங்களில் ஒன்றான கபலேஸ்வரி என்ற பெயரோடு இங்கு விளங்குகிறாள். அருகிலுள்ள மற்றுமொரு துர்க்கை கோயிலும் பார்வையாளர்களால் வணங்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications