தர்மஷாலாவிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நதீ மற்றும் தல்னூ புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன. தர்மஷாலாவின் உயர்ந்த பகுதியாக விளங்கும் இந்தப்பகுதிகள், சுற்றியிருக்கும் பள்ளத்தாக்குகளைக் காண கழுகுப்பார்வையை நமக்கு அளிக்கிறது.
இங்கே சூரியன் மறையும் காட்சியை காணும் போது ஒரு நிமிடம் நாம் சுவாசிப்பதையே மறந்து, அதன் அழகில் லயித்து நிற்போம். இது தவிர, கரேரி எரி, திரையுந்த் மற்றும் குணா தேவி ஆகியவற்றில் மலையேற இங்கிருந்துதான் நமது பயணத்தை தொடங்க வேண்டும்.



Click it and Unblock the Notifications