சுற்றுலாப் பயணியரை ஈர்க்கும் நம்கியல்மா ஸ்தூபி மெக்லியோட்கஞ்ச்சின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. திபெத்திய சுதந்திரப் போரில் இறந்த வீரர்களின் நினைவாக, அவர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக புத்த கலைநயத்தோடு இந்த ஸ்தூபி உருவாக்கப்பட்டது.
மன்னன் அசோகரின் காலமான 3 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்தூபிக்களை ஒத்து இதன் கட்டிடப் பாணி அமைந்துள்ளது. சாக்கியமுனி புத்தர் என்றழைக்கப்பட்ட கௌதம புத்தரின் அழகிய திருவுருவம் இந்த ஸ்தூபியில் ஒரு சிறிய இடத்தில் எடுத்துக்காட்டப்படுகிறது. தங்களது விருப்பங்கள் நிறைவேற பல்வேறு புத்த மத பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.



Click it and Unblock the Notifications