தர்மஷாலாவிலிருந்து 3 கிலோமீட்டர் தென்கிழக்கே அமைந்துள்ள இந்த சிறிய கிராமம், சுற்றுலாவிற்கு மிகவும் பெயர் போனது. பசுமையான தேயிலை தோட்டங்கள் மற்றும் பைன் காடுகள் சூழ்ந்த இந்த கிராமம் பார்வையாளர்களுக்கு எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளை வழங்குகிறது.
கஜ்லோட் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்த கிராமம் 1986 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு பெரிய பூகம்பத்திற்கு பிறகு புனரமைக்கப்பட்டது. பல ராஜபுத்திர குடும்பங்களின் தாயகமாக விளங்கும் நர்க்ஹோடா, காங்க்ரா பள்ளத்தாக்கின் ஒரு பரந்தகாட்சியை நமக்கு வழங்குகிறது. வலிமைமிக்க இமயமலையின் பனிபடர்ந்த தௌலதர் மலைத் தொடர்களையும் நமக்கு காட்டுகிறது.



Click it and Unblock the Notifications