மெக்லியோட்கஞ்சின் முக்கிய புகழ்பெற்ற இடமாக உள்ள த்ரையுந்த், கடல் மட்டத்திலிருந்து 2827 மீட்டர் உயரத்தில், வலிமைமிக்க இமாலயத்தின் தௌலதர் மலைத்தொடர்களின் மேல் உள்ளது.
ஒரு 9 km மலையேற்றப்பாதை மெக்லியோட்கஞ்சிலிருந்து த்ரையுந்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ரக்கர் மற்றும் தரம்கோட் போன்ற கிராமங்கள் கண்ணுக்கினிய காட்சியாக இம்மலையேற்றப் பாதையில் உள்ளன.
சிறந்த பொழுதுபோக்கு இடமாக விளங்கும் த்ரையுந்த் தர்மஷாலாவிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து, சுற்றுலாப் பயணிகளை தனது எழில் காட்சிகளால் மயக்கமுறச் செய்கிறது. இவ்விடத்தின் மூன் பீக் மற்றும் இந்தர் பாஸ் நம்மை வேறு உலகிற்கே அழைத்து சென்றுவிடும்.



Click it and Unblock the Notifications