மாபெரும் இமயமலையில் உள்ள கலாபானி என்ற இடத்தில் காளி ஆறு உற்பத்தியாகிறது. இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3600 மீ உயரத்தில் பித்தோரகார் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இந்த ஆற்றிற்கு அருகில் இருக்கும் காளி கோவிலின் பெயரால் தான் இந்த ஆற்றிற்கு காளி ஆறு என்று பெயர் வழங்கப்பட்டது. இந்த ஆறு இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இயற்கையான எல்லையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது; இந்தியாவில் உத்தரகாண்ட் மற்றும் உத்திரபிரதேசங்களில் சாரதா என்ற பெயரில் இந்த ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.
ஜாவ்ல்ஜிபியில் கோரி கங்கா ஆற்றுடன் இணையும் சாரதா ஆறு, இறுதியாக புனித நதியான கங்கையுடன் இணைந்து விடுகிறது. காளி ஆற்றின் பல்வேறு வழிப்பாதைகளில் சுற்றுலாப் பயணிகள் ஒயிட் வாட்டர் ராஃப்டிங் விளையாட்டுக்களை அனுபவித்திட முடியும்.



Click it and Unblock the Notifications