தர்மஸ்தாலா வரும் பயணிகள் கண்டிப்பாக நேத்ராவதி ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் ராம் மந்திருக்கு செல்ல வேண்டும். இந்தப் புனித ஸ்தலம் 2003-ஆம் ஆண்டு நித்யானந்த சுவாமியால் கட்டப்பட்டது. இங்கு வரும் பயணிகள் பளிங்குக் கற்களால் ஆன ராம பெருமானின் சிற்பத்தையும், சீதா தேவி மற்றும் லக்ஷ்மணனின் சிற்பங்களையும் கண்டு சொக்கிப் போவது நிச்சயம். அதோடு இந்த கோயில் தியானம் செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாகும். ராம் மந்திர் காலை 6 முதல் 2 மணி வரையிலும், மாலை 5 முதல் 8 மணி வரையிலும் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டிருக்கும்.



Click it and Unblock the Notifications