Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தர்மஸ்தாலா » வானிலை

தர்மஸ்தாலா வானிலை

தர்மஸ்தாலாவில் அக்டோபரிலிருந்து மார்ச் வரை சீரான வெப்ப நிலை நிலவுவதால் சுற்றுலா வர ஏற்ற காலமாக இருக்கும்.  அதே போல் ஜூலை மாதத்திற்கும், செப்டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலங்களிலும் கூட பயணிகள் தர்மஸ்தாலாவுக்கு சுற்றுலா வரலாம்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : தர்மஸ்தாலாவின் வெப்ப நிலை கோடையில் அதிகபட்சமாக 42 டிகிரியும், குறைந்தபட்சமாக 27 டிகிரியுமாக இருக்கும். இந்த காலங்களில் பயணிகள் தர்மஸ்தாலாவுக்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது. அதிலும் குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் வாட்டி வதைக்கும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : தர்மஸ்தாலாவின் மழைக் காலங்களில் சுற்றுலா வருவது என்பது அவ்வளவு சிறந்தது அல்ல. ஏனென்றால் இந்த காலங்களில் மிதமான முதல் கனமழை பெய்தாலும், தர்மஸ்தாலாவின் வெப்பநிலை சூடாகவும், ஈரப்பதமாகவும்தான் இருக்கும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : தர்மஸ்தாலாவின் பனிக் காலத்தில் அதிகபட்சம் 32 டிகிரியும், குறைந்தபட்சம் 18 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும். இந்தக் காலங்களில் தர்மஸ்தாலாவின் வெப்பநிலை குளிர்ச்சியாகவும், இதமாகவும் இருப்பதால் பயணிகள் பெரும்பாலும் பனிக் காலத்தில் தர்மஸ்தாலா சுற்றுலா வருவதையே விரும்புவர்.