டிக்பாய்க்கு எந்த பருவத்திலும் பயணிக்கலாம் என்றாலும் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் பயணிப்பது சிறந்ததாகும். மழைக்காலங்களில் பச்சைபசேலென இருந்தாலும் குளிர்காலங்கள் அழகிய பனி படர்ந்த காலை வேளைகளால் அழகாக காட்சி தருகிறது. அதனால் ஆங்கிலேய வாசம் வீசும் இந்நகரை இப்பருவங்களில் கண்டுகளிப்பது சிறந்ததாகும்.
மார்ச் மாதத்தில் துவங்கும் கோடை ஜூன் வரை நீள்கிறது. 22ல் இருந்து 38டிகிரி வரை செல்லும் வானிலை வெப்பமாகவும், ஈரப்பதம் நிறைந்ததாகவும் இருக்கிறது. கோடை காலத்தி டிக்பாய் செல்லும் பயணிகள் தேவையான ஆயத்தங்களுடன் செல்வது நலம்.
ஜூன் இறுதியில் துவங்கும் மழைக்காலம் அடுத்த சில மாதங்கள் வரை நீள்கிறது. தேவையான அளவு மழை பெய்கிறது. சராசரியாக 120இன்ச் மழை பதிவாகிறது.
நவம்பரில் துவங்கும் குளிர்காலம் ஃபிப்ரவரி இறுதி வரை நீள்கிறது. குளிர் அதிகமில்லாததால் குளிர்கால வானிலை மிதமாக இருக்கிறது. 7டிகிரியில் இருந்து 20டிகிரி வரை வானிலை மாறுபடுகிறது. பனி படர்ந்த காலை நேரங்களும் மதிய வேளைகளும் குளிர்காலங்களை ரம்மியமாக்குகின்றன.