Search
  • Follow NativePlanet
Share

திஸ்பூர் - அஸ்ஸாம் தலைநகரத்தில் சுற்றுலாப் பயணம்

8

அஸ்ஸாமில் வேகமாக வளர்ந்து வரும் வணிக நகரமான கௌகாத்தியிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள தலைநகரம் தான் திஸ்பூர். திஸ்பூருக்கு முன்னர் ஷில்லாங் நகரம் அஸ்ஸாமின் தலைநகரமாக இருந்தது. 1973-ம் ஆண்டு மேகாலயா மாநிலம் அஸ்ஸாமிலிருந்து பிரிக்கப்பட்டு உருவான போது, ஷில்லாங் அந்த புதிய மாநிலத்தின் தலைநகரமாக மாறியது. இதன் பின்னர் திஸ்பூர் அஸ்ஸாமின் தலைநகரமாக உள்ளது.

திஸ்பூரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

திஸ்பூர் நகரத்தில் அஸ்ஸாமின் செயலகம் மற்றும் அஸ்ஸாம் சட்டசபை போன்ற அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. சில்பாகிராம் மற்றும் வசிஷ்ட ஆசிரமம் போன்ற சில சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் இங்கே அமைந்துள்ளன.

தேயிலை ஏலம் விடும் சந்தைகள் திஸ்பூரின் புகழ் மிக்க இடங்களாகும். தலைநகரமாக இருந்தாலும் அருகிலுள்ள கௌகாத்தியின் நிழலில் வளரும் நகரமாகவே திஸ்பூர் உள்ளது.

திஸ்பூரில் ஆரிய, திபெத்திய மற்றும் பர்மிய இன பூர்விக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மிகவும் உறுதியாக நம்புபவர்களாவர்.

பிஹு போன்ற பண்டிகைகள் இங்கே வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அஸ்ஸாமிய மொழி அலுவல் மொழியாக இருந்தாலும், ஆங்கிலமும் இந்தியும் இங்கே பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

திஸ்பூரின் பருவநிலை

திஸ்பூரின் பருவநிலை கௌகாத்தியின் பருவநிலையைப் போலவே இருக்கும். எனினும், மழைக்காலம் முடிந்து குளிர்காலம் வலுப்பெறத் துவங்கும் நவம்பர் முதல் மார்ச் வரையிலான நாட்கள் தான் திஸ்பூருக்கு சுற்றுலா வர மிகவும் ஏற்ற நாட்களாகும்.

திஸ்பூரை அடையும் வழிகள்

திஸ்பூர் நகரம் முக்கிய நகரங்களுடன் சாலை, விமானம் மற்றும் இரயில் போக்குவரத்துகளின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

திஸ்பூர் சிறப்பு

திஸ்பூர் வானிலை

சிறந்த காலநிலை திஸ்பூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது திஸ்பூர்

  • சாலை வழியாக
    அஸ்ஸாமில் எல்லா முக்கியமான நகரங்களும் தலைநகரம் திஸ்பூருடன் 31, 37, 40 மற்றும் 52வது தேசிய நெடுஞ்சாலைகள் ஆகியவற்றின் மூலமாக சிறப்புற இணைக்கப்பட்டுள்ளன. தொலைதூர பயணங்களுக்கேற்ற வகையில் தனியார் பேருந்துகளும், உள்ளூர் பயணத்திற்கு ஆட்டோ ரிக்ஷாக்களும் நியாயமான விலைகளில் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    திஸ்பூருக்கு அருகில் உள்ள இரயில் நிலையமாக கௌகாத்தி இரயில் நிலையம் உள்ளது. இந்த இரயில் நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற மெட்ரோ நகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் இரயில்கள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    முக்கியமான இந்திய நகரங்கள் மற்றும் சில முதன்மையான வெளிநாட்டு தலங்களுடன் நல்ல விமான சேவைகளை பெற்றுள்ள இடமாக திஸ்பூருக்கு மிகவும் அருகில் கௌகாத்தியில் உள்ள லோக்பிரிய கோபிநாத் போர்டோலாய் சர்வதேச விமான நிலையம் உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue