படேர்வாவில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள நல்தி பாஸ்தி ஆயிரக்கணக்கான மலையேற்றப் பயணிகளின் ஓய்விடமாக இருக்கும் பெருமை பெற்றது. சர்தால் அல்லது படேர்வாவிற்கு ஏறும் போதும், இறங்கும் போதும் இயற்கையின் மடியில் அமைந்திருக்கும் இந்த இடத்தில், மலையேற்றம் செய்பவர்கள் தங்கி செல்வார்கள்.
பனி மூடிய மலைகளின் நிழலில் அமைந்திருக்கும் இந்த ஓய்விடம், தியோதர் மரங்கள் சூழவும், பரந்த பசும் புல்வெளிகளையும் மற்றும் காட்டு பூக்களையும் கொண்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications