கடல் மட்டத்திலிருந்து 10500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் பாட்ரி காலி என்ற இடம் படேர்வாவில் இருந்து 40 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. கடுமையான பனிப்பொழிவைக் கொண்டிருக்கும் இந்த இடம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜுலை மாதத்தில் நடக்கும் மணி-மகேஷ் யாத்திரைக்கு செல்லும் புனிதப் பயணிகள் பாட்ரி காலி வழியாகவே செல்வார்கள். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் மடியில் துயில்வதோடு மட்டுமல்லாமல், குதிரை சவாரியும் செய்ய முடியும்.



Click it and Unblock the Notifications