துபாரேவிலிருந்து மைசூர் விமான நிலையம் 75 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் கோவா, சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து வரும் பயணிகள் சுலபமாக துபாரே வந்தடையலாம். அதே போல் பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம் 227 கிலோமீட்டரில் இருப்பதால் வெளிநாட்டு பயணிகளும் எந்த சிரமமுமின்றி துபாரே வந்து சேரலாம்.