Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » துபாரே » வானிலை

துபாரே வானிலை

துபாரேவுக்கு நீங்கள் வருடத்தின் எந்த காலங்களிலும் சுற்றுலா வரலாம். துபாரேவின் யானை முகாம்கள், சரணாலயங்கள், அணைகள் என்று ஒட்டுமொத்த கவர்ச்சி அம்சங்களையும் பயணிகள் கண்டுகளிக்க செப்டம்பர் முதல் மே மாதம் வரையிலான காலங்கள் மிகச் சிறப்பாக இருக்கும். அதேபோல் மார்ச், ஏப்ரல், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் துபாரேவுக்கு சுற்றுலா வரலாம்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன்) : துபாரேவின் கோடை கால வெப்பநிலை 35 டிகிரியை எட்டும். இந்தக் காலங்களில் துபாரேவை சுற்றிப் பார்க்க பெரும்பாலான பயணிகள் விரும்புவர்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செபடம்பர் வரை) : துபாரேவின் மழைக் காலங்களில் நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவது கடினமாக இருப்பதோடு , ஆபத்தாகவும் முடியலாம். அதனால் பயணிகள் மழைக் காலத்தில் துபாரே வருவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை) : துபாரேவின் பனிக் காலங்களில் குறைந்தபட்சமாக 15 டிகிரி வெப்ப நிலை பதிவாகும். இந்தக் காலங்களில் துபாரேவை சுற்றிப் பார்ப்பது சிறந்த அனுபவமாக இருக்கும்.