Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » துவாரகா » வானிலை

துவாரகா வானிலை

துவாரகா பகுதி வருடம் முழுதுமே இயற்கை அழகோடு ஜொலிக்கும் சூழலைக்கொண்டுள்ளது. கோடைக்காலம் வெப்பமாக இருந்தாலும் சுட்டெரிக்கும் உஷ்ணம் இல்லை. மழைக்காலத்தின் பகல் பொழுதுகள் இதமான பரபரப்பற்ற சூழலுடன் காட்சியளிக்கிறது. குளிர்காலம் சுற்றுலாவுக்கேற்ற இனிமையான பருவமாக விளங்குகிறது. சீதோஷ்ணம் மற்றும் நகரச்சூழல் யாவுமே சுற்றுலாப்பயணிகளுக்கு பிடிக்கும்படியாக இருப்பது இந்நகரின் விசேஷ அம்சமாகும்.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் துவாரகா வெப்பத்துடன் காட்சியளித்தாலும் அசௌகரியத்தை அளிக்காத இதமான தன்மையை கொண்டுள்ளது. மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் ஜுன் வரை நீடிக்கிறது. கோடைக்கால மாதங்கள் வெளிச்சுற்றுலாவுக்கு ஏற்றவையாக இருப்பது ஒரு விசேஷ அம்சமாகும். 20°C  முதல் 32°C  வரை இங்கு சராசரி வெப்பநிலை நிலவுகிறது.

மழைக்காலம்

ஜுலை தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் பகல்பொழுது இனிமையானதாகவும் இரவுப்பொழுது மிகக்குளிருடனும் காணப்படுகிறது.

குளிர்காலம்

18°C  தொடங்கி  28°C  வரை வெப்பநிலை நிலவும் குளிர்காலத்தில் மற்ற எல்லா பருவங்களையும்விட இன்னும் இனிமையான ரசிக்கும்படியான சுற்றுச்சூழலுடன் துவாரகா நகரம் காட்சியளிக்கிறது.