Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கடக் » வானிலை

கடக் வானிலை

குளிர்காலமே கடக் ஸ்தலத்துக்கு விஜயம் செய்யவும் சுற்றிப்பார்க்கவும் ஏற்ற காலமாகும்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை) : கோடைக்காலத்தில் கடக் பகுதி அதிக உஷ்ணத்துடனும் ஈரப்பதத்துடனும் உள்ளது. இக்காலத்தில் வெப்பநிலை அதிகபட்சம் 350C ஆகவும் குறைந்தபட்சம் 270C  ஆகவும் காணப்படுகிறது. கடக் பகுதிக்கு சுற்றுலா செல்ல கோடைக்காலம் பொருத்தமற்றதாக கருதப்படுகிறது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர்) : மழைக்காலத்தில் கடக் பிரதேசம் கடுமையான மழையைப்பெறுகிறது. அக்டோபர் மாதத்திலும் லேசான மழைப்பொழிவு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பல காரணங்களை முன்னிட்டு மழைக்காலம் இங்கு விஜயம் செய்ய அசௌகரியமான பருவமாக உள்ளது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் மார்ச் வரை) : குளிர்காலத்தில் கடக் பகுதி குளுமையாகவும் இனிமையான சூழலையும் கொண்டுள்ளது. இரவில் வெப்பநிலை 180C ஆகவும் பகலில் 280C ஆகவும் உள்ளது.