கலிபோரே - காடுகளுக்கு மத்தியில் அற்புதமான தருணங்கள்!

கர்நாடக தலைநகர் பெங்களூரிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில், காவேரி வனவிலங்கு சரணாலயத்தின் அடர் வனங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது கலிபோரே பகுதி. இந்த கலிபோரே பகுதி காவேரி ஆற்றின் கரையோரங்களில் இருப்பதால் இதன் மீன்பிடி முகாம் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.

கலிபோரே பகுதி அழகிய சுற்றுலாத் தலமாக இருப்பதால் இயற்கை காதலர்களை ஈர்க்கும் அதே வேளையில், தொழிற்சார் தூண்டிற்காரர்களின் விருப்பமான பகுதியாகவும் இருந்து வருகிறது.

இங்கு மகாசீர் என்ற மீன் இனம் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் இப்பகுதியில் 'பிடித்து விடும்' முறை பின்பற்றப்படுவதால் அவற்றை பிடித்த பின் மீண்டும் ஆற்றில் விட்டு விடவேண்டும். இந்த மகாசீர் மீன்களை தவிர இங்கு கெண்டை, கெளுத்தி மற்றும் எண்ணற்ற சிறிய வகை மீன்களும் காணப்படுகின்றன.

கலிபோரே பகுதி வனவிலங்கு மற்றும் பறவை காதலர்களுக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது. இங்கு நீங்கள் நெடுங்கிளாத்தி, கருப்பு வயிற்று கடற்பறவை, விரலடிப்பான், சாம்பல் தலை மீன் கழுகு, பல வண்ண முகட்டுக் குயில், பழுப்பு கழுகு, பல வண்ண மீன்கொத்தி உள்ளிட்ட 220-க்கும் மேற்பட்ட அரிய பறவை இனங்களை நீங்கள் தொட்டம்கலியில் கண்டு ரசிக்கலாம்.

அதோடு காட்டுப்பன்றி, சாம்பார் மீன், புள்ளி மான், ராட்சஸ அணில், சிறுத்தை, யானை, மலபார் ராட்சஸ அணில், குள்ள நரி போன்ற விலங்குகளையும் கலிபோரேவில் ரசித்துப் பார்க்கலாம். அதுமட்டுமல்லாமல் முதலைகள், ஆமைகள், பச்சோந்திகள், நாகப்பாம்புகள், மலைப்பாம்புகள் போன்ற ஊர்வன வகைகளையும் கலிபோரேவில் பார்க்கலாம்.

மேலும் கலிபோரேவில் பரிசல் மற்றும் படகுப்பயணம் செல்வது, மவுண்டெயின் பைக்கிங், டிரெக்கிங் என்று சாகச விளையாட்டுகளில் நீங்கள் ஈடுபடலாம்.

Please Wait while comments are loading...