Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கணபதிபுலே » வானிலை

கணபதிபுலே வானிலை

குளிர்காலம் கணபதிபுலே ஸ்தலத்திற்கு  விஜயம் செய்து இங்குள்ள கடற்கரையை ரசிப்பதற்கும் கோயிலை தரிசிப்பதற்கும் உகந்த  காலமாக உள்ளது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் கணபதிபுலே பகுதி மிக உஷ்ணத்துடன் உள்ளது. இக்காலத்தில் வெப்பநிலை 38°C வரை உயர்ந்து காணப்படுகிறது. ஆகவே கோடைக்காலத்தில் இப்பகுதிக்கு விஜயம் செய்வது – முக்கியமாக மே மாதத்தில் - பயணிகளாலும் யாத்ரீகர்களாலும் தவிர்க்கப்படுகிறது.

மழைக்காலம்

ஜுனில் துவங்கி செப்டம்பரில் வரையிலான மழைக்காலத்தில் கணபதிபுலே பகுதி நல்ல மழைப்பொழிவை பெறுகிறது. இக்காலத்தில் கணபதிபுலே பகுதியின் தூய்மையான கடற்கரைப்பகுதியானது மழையின் அழகுடன் சேர்ந்து எழிலுடன் காட்சியளிக்கின்றன.

குளிர்காலம்

அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் கணபதிபுலே பகுதியில் குளிர்காலம் விரும்பத்தக்கதாக உள்ளது. பயணிகள் ரசித்து சுற்றிப் பார்ப்பதற்கேற்ற மிக இனிமையான ஒரு சூழலுடன் இது உள்ளது. இரவில் இன்னும் சில டிகிரிகள் வெப்பநிலை குறையவும் செய்கிறது.