ஆதி சங்கரரின் கூற்றுப் படி, மங்களா கௌரி கோவிலானது மஹா சக்தி பீடங்களில் ஒன்றாகும். இந்தக் கோவிலானது பத்ம புராணம், வாயு புராணம், அக்னி புராணம் மற்றும் பல புராணங்கள் மற்றும் தந்திர வேலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலானது இந்துக்கள் மத்தியில் "சக்தி" என்கிற அன்னையின் தாக்கத்தை கட்டிக் காக்கும் ஒரு முக்கியக் கோவிலாக விளங்குகின்றது. இந்தக் கோவிலானது பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்ததாக நம்பப்படுகின்றது. இந்தக் கோயில் அன்னை சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான கோவிலாகும்.
இந்தக் கோவில் மங்களகிரி மலை மீது கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் உப சக்தி பீடம் என கருதப்படும் ஒரு கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலானது சிவனுடைய உடலின் ஒரு பகுதி நம்பப்படுகிறது.
இந்தக் கோவிலில் சக்தி மார்பக வடிவில் வணங்கப்டுகின்றாள். அந்த மார்பக வடிவானது உணவு அடையாளப்படுத்துவதாக கருதப்படுகின்றது. இந்தக் கோவிலை அடையவதற்கு பக்தர்கள் ஏராளமான படிக்கட்டுகள் மற்றும் வாகனகள் செல்லும் சாலையை கடந்து செல்ல வேண்டும்.
கருவறையில் மிக உன்னதமாக செதுக்கப்பட்ட பழங்கால சிற்பமானது அன்னையை உருவகப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது. கோவிலின் முன் பகுதி மண்டபத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
கோவிலின் முற்றத்தில் ஒரு தீ குழி ஒன்று உள்ளது. இந்தக் கோவிலின் வளாகத்தில் சிவன் மற்றும் மஹிஷாஸுர மர்த்தினி, துர்கா மற்றும் தக்ஷின காளியின் படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இரு சிறிய கோவில்கள் உள்ளன.



Click it and Unblock the Notifications