Search
  • Follow NativePlanet
Share

கயா - புனித யாத்திரை தலங்களின் சங்கிலித் தொடர்!!

14

புத்தமதத்தை நிறுவிய பகவான் புத்தர் பீஹாரில் உள்ள கயா நகரில் ஞானத்தை அடைந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். ஆகவே பிகாரில் உள்ள இந்த கயா நகரம் புத்த மதத்தினரிடையே மிகப் பிரபலமாக விளங்குகிறது. முந்தைய காலத்தில் இந்த நகரம் மகத சாம்ராஜ்யத்தின்  ஒரு பகுதியாக இருந்தது மேலும் இந்த நகரமானது பாட்னாவிற்கு தெற்கே  100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரமானது அனைத்து மதங்களிலும் மிகப் புனிதமாக கருதப்படுகின்றது.

இந்த நகரம் மூன்று பக்கங்களிலும்  சிறிய பாறைகளால் ஆன  மலைகளான மங்கள-கவுரி, ஷ்ஹ்ரிஙா-ஷ்ட்ஹன், ராம்ஸிலா, மற்றும் பிரம்மயோனி போன்றவற்றாலும், இதன் மேற்கு பக்கத்தில் ப்ஹல்கு என்கிற நதி ஓடுகின்றது.

கயா நகரத்திற்கு வடக்கில் ஜெஹ்னாபாத் மாவட்டமும் தெற்கில் ஜார்கண்ட் மாநிலத்தின் ச்ஹட்ரா மாவட்டமும் அமைந்துள்ளது. இதன் கிழக்கில் நவாடா மாவட்டமும் மேற்கில் அவுரங்காபாத் மாவட்டமும் அமையப்பெற்றுள்ளன. 

கயாவைச் சுற்றியுள்ள முக்கியமான சுற்றுலா இடங்கள்

கயா சுற்றுலாவானது ஏராளமான மத இடங்களை உள்ளடக்கியது. அத்தகைய இடங்கள் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை தன்னுள் கட்டி வைத்து விடுகின்றது.

இந்த  இடத்தில் நிழவும் அமைதி மற்றும் தெய்வீக தன்மையானது பரபரப்பான வாழக்கையில் இருந்து இடைவெளியை விரும்பும் அனைவருக்கும் மிக உன்னத விடுமுறையை வழங்குகின்றது.

இங்குள்ள மஹாபோதி கோயிலானது கயா சுற்றுலாவின்  இதயம் மற்றும் ஆன்மாவாக  இருக்கிறது. உலகம் முழுவதும் இருந்து இந்த இடத்திற்கு வரும் புத்த துறவிகளை இங்குள்ள மிகப் பெரிய புத்த சிலையின் முன் தியான நிலையில் காணலாம்.

கயா சுற்றுலாவில் இங்குள்ள யோனி, ராம்ஸிலா, பிரதிஸிலா, போன்றவையும், தியோ பாரபர் மற்றும் பாவபுரியில் உள்ள குகைகளும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இங்குள்ள புனிதமான படித்துறைகள் மற்றும் கோவில்கள் அனைத்தும் இங்குள்ள புனித நதியான ப்ஹல்கு கரையில் வரிசையாக அமைந்துள்ளன. இங்குள்ள அனைத்து இடங்களும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவை.

இங்குள்ள கட்டிடக்கலையில் சிறப்பு வாய்ந்த மற்றும் புனித இடங்களான ஜமா மஸ்ஜித், மங்கா கவுரி மந்திர் மற்றும் விஷ்ணூபாத  கோயில்  போன்றவை கயா சுற்றுலாவில் மிக முக்கிய இடம் வகிக்கின்றன.

கயா சுற்றுலாவில் குறிப்பிடத்தக்க மற்றொரு மயிர் கூச்சரியச் செய்யும் மற்றொரு விஷயம் இங்கு கிடைக்கும் பீஹாரின் பாரம்பரிய உணவு வகைகள் ஆகும்.

இங்கு கிடைக்கும் லிட்டி  ச்ஹ்ஹொக்ஹா, லிட்டி, பிட்டஹ், புஅ, மருஅ-கி-ரொட்டி, மற்றும் ஸாட்டு-கி-ரொட்டி போன்ற உணவுகள் மிகப் பிரபலமானவை.

இதைத் தவிர இங்கு கிடைக்கும் டில்குட், கெஸரியா பேடா மற்றும் ரமணா சாலை மற்றும் டெகரி சாலையின் அன்ஸாரா போன்ற இனிப்பு வகைகள் அதை உண்பவர்களின் நாவில் எச்சிலை வர வைத்து விடும்.

கயாவில் புத்த மத தொடர்புடைய திருவிழாக்கள் மிக விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. அவற்றுள் பிட்ரபக்ஸ்ஹா திருவிழாவானது மிகவும் சிறப்பு மிக்கது.

இந்த திருவிழாவானது புத்தரின் பிண்ட் தானம் என்கிற நிகழ்வுடன் தொடர்புடையது. இதைத் தவிர புத்த ஜெயந்தி திருவிழாவும் மிகவும் விமர்சையாக வைகாசி மாதத்தின் பெளணர்மி நாளன்று கொண்டாடப்படுகின்றது.

இந்த நகரத்தை விமானம், ரயில், மற்றும் சாலை வழியாக மிக எளிதாக அணுகலாம். கயாவிற்கு சுற்றுலா செல்ல நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களே மிகவும் சிறந்தது.

பிற மாதங்களில் இங்கு நிழவும் கடுமையான வெப்பம் மற்றும் குளிரின் காரணமாக இங்கு சுற்றுலா வருவது சிறந்ததல்ல. கயாவின் மிக  முக்கியமான  ஷாப்பிங் சென்டர்களாக  ஜி.பி. சாலை, சுதேசி வஸ்திராலயா, கலாமந்திர் மற்றும் பிளாசா மற்றும் கானி மார்க்கெட் போன்றவை விளங்குகின்றது.

கயாவை சுற்றிப் பார்க்க உகந்த காலம்

கயா சுற்றுலாவிற்கு மார்ச் முதல் அக்டோபர் வரையிலான பருவமே மிகவும் சிறந்தது. இங்கு மார்ச் மதல்  அக்டோபர் வரையில்  இனிமையான வானிலை நிலவுவதால் இந்தப் பருவத்தில் இந்தப் புனித நகரத்திற்கு சுற்றுலா வருவதே சிறந்தது. ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவம்  குறுகிய பயணத்திற்கும் கோவில்களை தரிசிப்பதற்கும் மிகவும் நல்லது.

கயா சிறப்பு

கயா வானிலை

சிறந்த காலநிலை கயா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கயா

  • சாலை வழியாக
    கிராண்ட் ட்ரங்க் ரோடு (NH-2, தங்க நாற்ககர சாலைகள் திட்டத்தின் கீழ் சிறப்பாக சீரமைக்கப்பட்டது) கயா நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது. ஆகவே கயா நகரானது கொல்கத்தா, வாரணாசி, அலகாபாத், கான்பூர், தில்லி மற்றும் அமிர்தசரஸுடன் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கயா சந்திப்பானது நாட்டின் மிக முக்கியமான நகரங்களான தில்லி, மும்பை, மற்றும் கொல்கத்தா உடன் அகல ரயில்பாதை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கயாவில் இருந்து தில்லிக்கு தினசரி இடை நிலை நில்லா ரயிலான மஹாபோதி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகின்றது. கயாவில் இருந்து இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு நேரடி ரயில்கள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    விமானம் மூலம் கயா செல்ல விரும்பிவர்களுக்காக கயாவில் ஒரு விமான நிலையம் உள்ளது. பீஹார் மற்றும் ஜார்கண்ட் பிரேதசத்தை உள்ளடக்கி கயாவில் மட்டுமே சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. இந்த சிறிய விமான நிலையம், கொழும்பு மற்றும் பாங்காக் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat