குடும்பத்துடன் சுற்றுலா செய்ய உகந்த இடமாக கோபால்பூர் கடற்கரை கருதப்படுகிறது. இங்கே குளிப்பதையும், விளையாடுவதையும் பயணிகள் வெகுவாக விரும்புகிறார்கள்.
குதிரையேற்றம், படகு சவாரி, உடல் மசாஜ் போன்ற பலவகையான பொழுதுபோக்குகள் இங்கு உண்டு. மாலையின் சூரிய அஸ்தனமத்தை இங்கிருந்து பார்ப்பது சிறந்த அனுபவமாக இருக்கிறது.
ராகங்கள் போல சீராக அடிக்கும் அலைகளை இளநீர் குடித்தபடி வேடிக்கை பார்ப்பதை பயணிகள் விரும்புகிறார்கள். இங்கிருக்கும் கலங்கரை விளக்கமும் புகழ்பெற்ற பழமையான ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications