Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குருவாயூர் » வானிலை

குருவாயூர் வானிலை

குளிர்காலத்தில் குருவாயூருக்கு சுற்றுலா மேற்கொள்வதே உகந்ததாக உள்ளது. ஆனால் விமரிசையான திருவிழாக்கொண்டாட்டங்களை பார்த்து ரசிக்க விரும்பினால் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான இடைப்பட்ட பருவத்தில் இங்கு விஜயம் செய்யலாம். இக்காலத்திலும் பருவநிலை மிதமாக சூழலை கொண்டுள்ளது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் குருவாயூர் நகரம் அதிகமான வெப்பம் மற்றும் வறண்ட சூழலுடன் காணப்படுகிறது. இக்காலத்தில் அதிகபட்சம் 37° C முதல் குறைந்தபட்சம் 28° C வரை வெப்பநிலை நிலவுகிறது. மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் மே மாதத்தில் முடிவடைகிறது. கோடைக்காலத்தில் குருவாயூருக்கு விஜயம் செய்வது அவ்வளவு சௌகரியமாக இருப்பதில்லை.

மழைக்காலம்

ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாத இறுதி வரை குருவாயூர் நகரத்தில் மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் கடும் மழைப்பொழிவை குருவாயூர் பெறுகிறது. மழை இருந்தாலும் இப்பகுதி வெப்பநிலை அவ்வளவாக குறைவதில்லை.

குளிர்காலம்

குளிர்காலத்தில் இனிமையான மற்றும் குளுமையான சூழலுடன் குருவாயூர் காட்சியளிக்கிறது. எல்லா கேரளப்பகுதிகளையும் போன்றே இங்கும் டிசம்பரில் துவங்கி பிப்ரவரி வரை மூன்று மாதத்துக்கு குளிர்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் குறைந்தபட்சமாக 23° C முதல் அதிகபட்சமாக 30° C வரை வெப்பநிலை நிலவுகிறது.