Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குவஹாத்தி » வானிலை

குவஹாத்தி வானிலை

அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் வரையிலான பருவமே இந்த நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. அக்டோபர் மாதத்திற்குள் இப்பகுதியின் மழைக்காலம் முடிந்துவிடுகிறது.அதனை அடுத்து வரும் குளிர்கால மாதங்களான டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்கள் இனிமையான சூழலுடன் சுற்றுலாவுக்கு உகந்தவையாக உள்ளன. மேலும் இம்மாதங்களில் நடைபெறும் போஹாக் பிஹு மற்றும் மக் பிஹு ஆகிய திருவிழாக்களையும் கண்டு களிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன்- ஜூலை வரை) : குவஹாத்தி நகரத்தில் மார்ச் முதல் மே வரை கோடைக்காலம் நீடிக்கிறது. குறிப்பாக மே மாதத்தில் கடும் உஷ்ணம் இப்பகுதியில் நிலவுகிறது. இக்காலத்தில் சராசரியாக 25°C துவங்கி அதிகபட்சம் 38°C வரை வெப்பநிலை நிலவுகிறது. குவஹாத்தி கோடைக்காலத்தில் உஷ்ணம் மற்றும் வறட்சியுடன் காணப்படுகிறது. அசௌகரியத்தை அளிக்கும் வெப்பத்தை சமாளிப்பதற்கு மெல்லிய பருத்தி உடைகளுடன் பயணிகள் பயணம் மேற்கொள்வது சிறந்தது.

மழைக்காலம்

(ஜுன் முதல் ஆகஸ்ட் வரை) : கோடைக்காலத்தின் கடைசி மாதங்களோடு குளிர்காலத்தின் துவக்க மாதங்கள் இணைந்து காணப்படுகின்றன. ஜுன் மாதம் துவங்கி ஆகஸ்ட் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. மழைக்காலம் முழுவதும் பரவலான ஒரே சீரான மழைப்பொழிவை இப்பகுதி பெறுகிறது. 180 செமீ வருடாந்திர மழைப்பொழிவு இப்பகுதியில் அளவிடப்பட்டிருக்கிறது.

குளிர்காலம்

 (நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை நிலவும் குளிர்காலத்தின்போது குவஹாத்தி நகரத்தில் குளுமையான சூழல் காணப்படுகிறது. இக்காலத்தில் 10°C துவங்கி அதிகபட்சம் 25°C வரை வெப்பநிலை நிலவுகிறது. இரவு நேரத்தில் அதிக குளிர் காணப்படும் என்பதால் சுற்றுலாப்பயணிகள் தேவையான உல்லன் உடைகளுடன் பயணிப்பது சிறந்தது. பொதுவாக சுற்றுலாப்பயணத்துக்கேற்ற ரசிக்கக்கூடிய ஒரு பருவமாகவே குளிர்காலம் காணப்படுகிறது.