Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹம்பி » வானிலை

ஹம்பி வானிலை

யுனெஸ்கோ அமைப்பின் மூலம் சர்வதேச பண்பாட்டு மையமாக அறிவிக்கப்பட்டுள்ள ஹம்பி சுற்றுலா தலத்துக்கு செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர் காலத்தில் செல்வதே சிறந்தது. இச்சமயம் பல திருவிழாக் கொண்டாட்டங்களும் ஹம்பியில் நடத்தப்படுகின்றன.

கோடைகாலம்

(மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை): கோடைக்காலத்தில் ஹம்பி பிரதேசம் முழுவதும் அதிக வெப்பத்துடனும் வறட்சியாகவும் காணப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலையாக 40° C காணப்படுகிறது. அதிக வெப்பமும் வறட்சியும் வாட்டி எடுக்கும் என்பதால் இந்த காலத்தில் ஹம்பிக்கு பயணம் செல்வது அவ்வளவு உகந்ததல்ல.

மழைக்காலம்

(ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை): மழைக்காலத்தில் ஹம்பி பிரதேசம் கணிசமான மழைப்பொழிவினை பெறுகிறது. பல சுற்றுலாப்பயணிகள் இக்காலத்தில் ஹம்பிக்கு வருகை தருகின்றனர்.

குளிர்காலம்

(செப்டம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை): குளிர்காலத்தின் போது ஹம்பி சுற்றுலா ஸ்தலம் மிக இனிமையான சீதோஷ்ண நிலையுடன் விரும்பத் தக்க சூழலுடன் காணப்படுகிறது. பகலில் 30° C வெப்பநிலையும் இரவில் மிகக் குறைவான 12° C வெப்பநிலையும் இக்காலத்தில் நிலவுகின்றது.