தாரேளி, ஹர்சிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இந்த கிராமம், புனிதமான கங்கைக்கரையில் அமைந்துள்ளது. இக்கிராமத்தை சுற்றி பசுமை நிறைந்த பைன் மரங்கள் உள்ளன.
சுற்றுலா பயணிகள் இங்கு ஏராளமான ஆப்பிள் தோட்டங்கள் மற்றும் சிவப்பு காராமணி தோட்டங்களை பார்க்க முடியும். இங்கிருந்து பனி மூடிய சிகரங்களின் மெய்மறக்கச்செய்யும் இயற்கை காட்சிகளை காணலாம்.
இந்த கிராமத்தில் மிகவும் பழமையான ஒரு சிவாலயம் உள்ளது. இதன் கட்டமைப்பு, புகழ்பெற்ற கேதார்நாத் ஆலயத்தின் கட்டமைப்பை ஒத்துள்ளது. முக்கிதிநாத் ஆலயம், கங்கோத்ரி, தபோவன், வாசுகி டால், கங்காநி, மற்றும் சிர்பாசா ஆகியன இதன் அருகில் உள்ள குறிப்பிடத்தக்க சுற்றுலா மையங்களாகும்.



Click it and Unblock the Notifications