Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹோசாங்காபாத் » வானிலை

ஹோசாங்காபாத் வானிலை

அக்டோபர் முதல் ஜுன் வரையிலான நாட்கள் ஹோசாங்காபாத் நகரத்திற்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற நாட்களாகும். இந்நாட்களில் பருவநிலை குளிர்ச்சியாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். மழைப்பொழிவு குறைவாக இருக்கும் இந்நாட்கள் ஹோசாங்காபாத் நகர சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற நாட்களாகும்

கோடைகாலம்

ஹோசாங்காபாத்தில் கோடைக்காலத்தில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியஸ் மட்டுமே உள்ளதால், இது ஒன்றும் கொடுமையான வெப்பநிலையாக இருக்காது. இந்நாட்களில் வெப்பநிலை மகிழ்ச்சிகரமானதாகவே இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் இங்கு தங்கியிருப்பதில் எந்தவித அசௌகரியமும் கிடையாது. இந்நாட்களில் ஹோசாங்காபாத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் பருத்தி ஆடைகள் மற்றும் குடைகளை கொண்டு வருவது தகுந்த முன்னேற்பாடாக இருக்கும்.

மழைக்காலம்

ஹோசாங்காபாத்தில் நவம்பர் மாதம் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரை நீடித்திருக்கும். இந்நாட்களில் வெப்பநிலையானது 19.42 டிகிரிகளுக்கு குறைவாக செல்லாது. எனவே, இந்நாட்களின் பருவநிலை குளிர்ச்சியாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். எனவே, குளிர்காலங்களிலும் ஹோசாங்காபாத் நகரத்திற்கு சுற்றுலா வரலாம்.

குளிர்காலம்

ஹோசாங்காபாத்தின் மழைக்காலம் ஜுன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரையிலும் நீடித்திருக்கும். இந்நாட்களில் சுமார் 1343.6 மிமீ வரையிலும் மழைப்பொழிவைப் பெறும் நகரமாக ஹோசாங்காபாத் உள்ளது. இந்நாட்களில், மிகவும் அதிகமான மற்றும் கடுமையான மழைப்பொழிவு நிகழும் இடமாக ஹோசாங்காபாத் இருப்பதால் மழைக்காலத்தில் இங்கு வருவது சிறந்த சுற்றுலா அனுபவத்தைக் கொடுக்காது.