ஹுப்ளி செல்லும் பயணிகளின் பட்டியலில் பிரதானமாக இடம் பெறவேண்டிய அம்சம் இந்த உன்கல் ஏரியாகும். 110 ஆண்டுகள் பழமையை உடைய இது தன் அமைதியான சூழலுக்கும், காட்சி அழகுக்கும் புகழ் பெற்று விளங்குகிறது.
200 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இந்த ஏரி சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. இதர பொழுது போக்கு அம்சங்களுடன் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தை இந்த ஏரியின் பின்னணியில் பார்த்து ரசிப்பது நல்லதோர் அனுபவமாக இருக்கும்.இந்த ஸ்தலத்தின் குறிப்பிடத்தக்க விசேஷமாக ஏரியின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் சிலையைச் சொல்லலாம். மேலும் இந்த ஸ்தலம் ஷீ சித்தப்பஜ்ஜா எனும் யோகியின் கர்ம பூமியாக விளங்குகிறது.
1859ம் ஆண்டு பிறந்த அவர் ஒரு குருவைத்தேடும் நோக்கத்துடன் 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி உன்கல் மைலார்லிங்க கோயிலில் வசித்ததாக சொல்லப்படுகிறது. 1921ம் ஆண்டு இந்த ஷீ சித்தப்பஜ்ஜா யோகி மறைந்தபின் இங்கு ஒவ்வோர் ஆண்டும் ஒரு ரதபவனி நடத்தப்படுகிறது.உன்கல் ஏரியானது அதன் அருகிலுள்ள நகரங்களுக்கு நீராதாரமாகவும் விளங்குகிறது. இந்த ஏரியை சூழ்ந்துள்ள வளாகம் பசுமையான பூங்காக்களுடன் அமைதியான ஒரு சூழலைக்கொண்டுள்ளது. மேலும் இந்த ஏரியில் படகுச்சவாரி வசதிகளும் உள்ளன.



Click it and Unblock the Notifications