ஹைதராபாத் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Hyderabad,Telangana 23 ℃ Partly cloudy
காற்று: 13 from the WNW ஈரப்பதம்: 84% அழுத்தம்: 1007 mb மேகமூட்டம்: 9%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Friday 22 Sep 26 ℃ 78 ℉ 32 ℃89 ℉
Saturday 23 Sep 25 ℃ 78 ℉ 31 ℃89 ℉
Sunday 24 Sep 26 ℃ 78 ℉ 32 ℃90 ℉
Monday 25 Sep 25 ℃ 77 ℉ 32 ℃89 ℉
Tuesday 26 Sep 25 ℃ 78 ℉ 32 ℃90 ℉

குளிர்கால மாதங்களே ஹைதராபாத் நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. அதிக வெப்பம் இல்லாத , அதிக குளிரும் இல்லாத சூழலுடன் காணப்படுவதால் இப்பருவம் ஊர் சுற்றிப்பார்த்து ரசிக்க ஏற்றதாக உள்ளது. குறிப்பாக பகலில் இதமான சூழல் நிலவுவது சுற்றுலாவுக்கு உகந்ததாக காணப்படுகிறது. இருப்பினும் மாலை மற்றும் இரவு நேரத்தில் குளுமை அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் அதற்கேற்ற உடைகளுடன் பயணிப்பது நல்லது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் ஹைதராபாத் பகுதியில் அதிகபட்சமாக 40° C வரை வெப்பநிலை உயர்ந்து கடும் வெப்பத்துடன் காட்சியளிக்கிறது. சுட்டுப்பொசுக்கும் வெப்பம் காரணமாக இக்காலத்தில் ஊரைச் சுற்றிப்பார்ப்பது இயலாத ஒன்றாகவே உள்ளது. கோடை வெயில் சருமத்தையே கருக்க வைப்பது மட்டுமன்றி, கவனமாக இல்லாவிட்டால் உடலில் நீர் வறட்சியையும் ஏற்படுத்திவிடும்.

மழைக்காலம்

ஹைதராபாத் பகுதியில் மழைக்காலம் உற்சாகமூட்டும் பருவமாக வருகை தருகிறது. வெப்பநிலை கணிசமாக குறைந்தாலும் ஈரப்பதம் அதிகமாகி விடுவது அசௌகரியமாகவே இருக்கக்கூடும். ஜுன் மாத மத்தியில் துவங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதத்தின் பாதி வரை நிலவுகிறது. இக்காலத்தில் ஹைதராபாத் பகுதி கடுமையான மழைப்பொழிவை பெறுகிறது. பொதுவாக மழைக்காலம் ஹைதராபாத் நகரத்தில் வெளிச்சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக இல்லை.

குளிர்காலம்

ஹைதராபாத் பகுதியில் கடும் குளிர் நிலவுவதில்லை என்ற போதிலும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் சற்று அதிக குளுமை காணப்படுகிறது. இருப்பினும் சாதாரணமான ஜாக்கெட் அல்லது புல்-ஓவர் இந்த குளிரை சமாளிக்க போதுமானது. டிசம்பர் மாதம் துவங்கி ஜனவரி மாத பாதி வரை குளிர்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் வெப்பநிலை 19° C அளவுக்கு குறைந்து காணப்படுகிறது.