Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இஸ்லாம் நகர் » வானிலை

இஸ்லாம் நகர் வானிலை

நவம்பர் முதல் பிப்ரவரி வரை உள்ள காலம் இஸ்லாம் நகருக்குச் செல்ல தகுந்த காலம் ஆகும். ஏனெனில் இந்த காலத்தில் உக்கிரமான வெயில் இல்லாமல் இங்கிருக்கும் அரண்மனைகளைக் களைப்பில்லாமல் சுற்றிப் பார்க்க முடியும். 

கோடைகாலம்

மார்ச் முதல் மே மாதம் வரை இஸ்லாம் நகரில் கோடைகாலம் நிலவுகிறது. இந்த காலத்தில் 35 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இங்கு வெப்பநிலை இருக்கும். எனவே இந்த காலத்தில் சுற்றுலாப் பயணிகள் இஸ்லாம் நகருக்குச் செல்லாமல் இருப்பது நல்லது.

மழைக்காலம்

இஸ்லாம் நகரில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை மழைக்காலம் ஆகும். இந்தக் காலத்தில் இங்கு அடிக்கடி மழை பெய்யும். அதனால் வெப்பம் அதிகமாக இருக்காது. மேலும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களிலும் இங்கு ஓரளவு மழை இருக்கும்.

குளிர்காலம்

குளர்காலத்தில் இஸ்லாம் நகரின் தட்பவெப்பநிலை மிகவும் இதமாக இருக்கும். நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை இங்கு குளிர்காலம் நிலவுகிறது. இந்த காலத்தில் 10 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். குளிர்காலத்தில் இஸ்லாம் நகருக்கு சுற்றுலா செல்வது சிறந்த அனுபவமாக அமையும்.