ஜக்தல்பூர் நகர்ப்பகுதியிலேயே இந்த தல்பட் சாகர் ஏரி அமைந்திருக்கிறது. இது சத்திஸ்ஹர் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய செயற்கை ஏரியாக புகழ் பெற்றிருக்கிறது. இது ராஜா தல்பத் காகத்தியா எனும் மன்னரால் 400 வருடங்களுக்கு முன்னர் மழை நீரை சேகரிக்கும் நோக்கத்துடன் வெட்டுவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் நடுவே அமைந்திருக்கும் தீவுப்பகுதியில் உள்ளூர் குல தெய்வத்துக்கான ஒரு புராதன கோயிலும் வீற்றிருக்கிறது. துடுப்புப்படகு அல்லது மீன்பிடி படகுகளில் பயணிகள் இந்த தீவுப்பகுதிக்கு வரலாம்.
அமைதியுடன் காட்சியளிக்கும் இந்த தீவுப்பகுதி ஏகாந்தமாக தனிமையையும் இயற்கை எழிலையும் ரசிக்க பொருத்தமாக உள்ளது.
தற்போது பயணிகள் வசதிக்காக சத்திஸ்ஹர் மாநில சுற்றுலாத்துறை துடுப்புப்படகு மற்றும் மோட்டார் படகு வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது. ஒரு பூங்காவைப்போன்று மக்கள் பொழுதுபோக்குவதற்கான அடிப்படை வசதிகளும் இந்த தீவுப்பகுதியில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இந்த தீவுப்பகுதியில் தென்னை மரங்கள், விளக்கு கோபுரம் மற்றும் இசை நீருற்றுகள் ஆகியவற்றை பார்க்கலாம். நேரம் போவது தெரியாமல் அமர்ந்து சுற்றியுள்ள எழிற்காட்சிகளையும் சூரிய உதயத்தையும் பார்த்து ரசிப்பதற்கு இது மிகவும் ஏற்ற இடம். இங்குள்ள இசை நீரூற்றும் பயணிகள் மத்தியில் பரவலாக ரசிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications