ஜக்தல்பூர் நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் சித்ரகூட் நீர்வீழ்ச்சிக்கு அருகிலேயே இந்த தம்ரா கூமார் நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. வெகு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் மட்டுமே உருவாக 100 அடி உயரத்திலிருந்து விழுகிறது. சித்ரகூட் மற்றும் தீரத்கர் நீர்வீழ்ச்சிகளை போலவே இதுவும் இயற்கை எழில் நிரம்பிய பசுமையான வனப்பகுதியின் நடுவே வீற்றிருக்கிறது.
தனிமையான ஒரு பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியை தரிசிப்பதற்காக இயற்கை ரசிகர்கள் சிரமத்தை பார்க்காமல் தேடி வருகின்றனர். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பிக்னிக் சிற்றுலா மேற்கொள்ளவும் இது ஏற்ற இடமாக உள்ளது.
மலையேற்றம் மூலம் இந்த இடத்துக்கு பயணம் மேற்கொண்டால் ஏராளமான இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். மழைக்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சியை பார்ப்பது சிறந்தது.
சத்திஸ்கர் மாநிலத்தின் முக்கியமான பிக்னிக் ஸ்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ள இந்த இடத்துக்கு உள்ளூர் மக்களும் அதிகமாக விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications