Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெயின்டியா மலைகள் » ஈர்க்கும் இடங்கள் » லேடி ஆஃப் குட் ஹெல்த் வழிபாட்டுத்தலம்

லேடி ஆஃப் குட் ஹெல்த் வழிபாட்டுத்தலம், ஜெயின்டியா மலைகள்

31

ஜோவாய் நெடுஞ்சாலையில் இருந்து 32 கிமீ தொலைவில் உள்ள ராய்லாங் கிராமத்தில் லேடி ஆஃப் குட் ஹெல்த் வழிபாட்டுத்தலம் உள்ளது. எண்கோண வடிவத்தில், மூன்றடுக்கு கட்டிடமாக இந்த இடம் அமைந்துள்ளது.

இந்த கட்டிடத்தின் வளைவான மேல்தளத்தின் உச்சியில், ஒரு உலக உருண்டையின் மேல் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ள லேடி ஆஃப் குட் ஹெல்த் சிலை தொலைவிலிருந்து பார்த்தால் கூட நன்றாகத் தெரியுமாறு உள்ளது. இந்த வழிபாட்டுத் தலத்தில் ஒரு பெரிய கூடமும், அதன் நடுவில் ஒரு பலி பீடமும் உள்ளது.

இந்த கோவிலின் உண்மையான அமைப்பு, தமிழ் நாட்டின் வேளாங்கண்ணி என்ற சிறு நகரத்தில், கன்னி மரியாள் தோன்றியதாக சொல்லப்படும் இடத்தில் உள்ளது.

இங்கு விளங்கி வரும் கதையின் படி, குழந்தை ஏசுவை ஏந்தியபடி இருக்கும் கன்னி மரியாளின் மாய உருவத்திடம், பால் கொடுக்கும் ஒரு இடையர் குல சிறுவன் நின்று கொண்டிருந்த இடம் தான் இன்று இந்த வழிபாட்டுத்தலம் கட்டப்பட்டுள்ள இடமாகும்.

ஜோவாயில் உள்ள லேடி ஆஃப் குட் ஹெல்த் வழிபாட்டுத் தலத்தில் நிகழ்ந்ததாக சொல்லப்பட்ட அதிசயங்கள் இந்த இடத்துடனும் அதே போன்ற அனுபவங்களை கொண்டுள்ளன. ஷில்லாங்கில் இருந்து வாடகை காரில் இங்கு வருவது மிகவும் எளிமையான வழிமுறையாகும்.