மேகலயா மாநிலத்தில் உள்ள ஜெயின்டியா மலைகளில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமாக கிம் மூ ஸ்நியாக் உள்ளது. உள்ளூர் மொழியில் 'மூ' என்றால் கல் என்றும், 'ஸ்நியாக்' என்றால் பன்றி என்றும் பொருளாகும்.
இந்த இடத்தில் உள்ள பன்றி வடிவ கல்லின் காரணமாகவே இந்த இடம் பெயர் பெற்றுள்ளது. இந்த கல்லுக்கு தங்களை பாதுகாக்கும் சக்தி உள்ளதாக கருதும் ஜெயின்டியா பிரிவினர் இதனை வழிபட்டு வருகின்றன.
உள்ளூர் மக்கள் மிகவும் மரியாதையுடன் நம்பி வரும் இந்த கற்கடவுளை காண சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகிறார்கள். ஜெயின்டியா மலைகளில் காணப்படும் உள்ளூர் உணவுகளை சுவைக்க விரும்புவர்களுக்காகவே இங்கே சில உணவு விடுதிகளும் உள்ளன.
இங்கே இருக்கும் மரம் மற்றும் மூங்கிலால் ஆன சிறிய கடைகளில் சுற்றுலாப் பயணிகள் இந்த பகுதியில் செய்யப்பட்ட கையால் உருவாக்கப்பட்ட உள்ளூர் பொருட்களை வாங்க முடியும்.
ஷில்லாங்கில் இருந்து பேருந்து அல்லது டாக்ஸிகளில் சுற்றுலாப் பயணிகள் ஜெயின்டியா மலைகளுக்கு எளிதில் செல்லலாம்.