Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெயின்டியா மலைகள் » ஈர்க்கும் இடங்கள் » ரூபார்ஸோர் பாத்திங் காட்

ரூபார்ஸோர் பாத்திங் காட், ஜெயின்டியா மலைகள்

31

மேகாலயா மாநிலத்தின் ஜோவாய் நகரத்தில் ஜோவய் - முக்தாபூர் சாலையில் முக்கியமான சுற்றுலாத் தலமான ரூபார்ஸோர் பாத்திங் காட் அமைந்துள்ளது. மற்றுமொரு முக்கியமான சுற்றுலாத்தலமாக தாவ்கியில் இருந்து 8 கிமீ தொலைவிலேயே இந்த மலை அமைந்துள்ளது.

இந்த கிரானைட்டால் உருவாக்கப்பட்டுள்ள பாத்திங் காட் குளத்தை ஜெயின்டியா அரசரின் ஆணைப்படி அவருடைய தளபதிகளான யூ லூ லிங்ஸோர் லாமாரே மற்றும் யூ மார் பாலிங்கி ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

இந்த குளம் 19 ½ அடி நீளம் மற்றும் 15 அடி அகலம் மற்றும் 5 அடி ஆழம் உடையதாகும். அரச குடும்பத்தினரின் பொழுதுபோக்கிற்காக கட்டப்பட்ட இந்த குளத்தின் மேற்குப் பகுதியில் உடை மாற்றும் அறையும் உள்ளது. யானையின் தந்தத்தைப் போல தோற்றமளிக்கும் ரூபார்ஸோர் நீரூற்றில் இருந்து இந்த பாத்திங் காட்டிற்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

அழகிய சுற்றுச்சூழல் மற்றும் மகிழ்ச்சியை கொண்டிருக்கும் சுற்றுலாத்தலமான ரூபாஸோருக்கு சுற்றுலா வருவது நல்ல அனுபவமாக இருக்கும். இதன் நீல நிற தண்ணீர் கண்ணைப் பறிக்கும் வகையிலும் மற்றும் சுற்றுலாப் பயணியை 'டைவ்' அடித்து நீச்சலடித்து, அவரை புத்துணர்ச்சி பெறத் தூண்டும் வகையிலும் இருக்கும்.

ஷில்லாங்கில் இருந்து ஒரு சுற்றுலாப் பேருந்தையோ அல்லது தனியார் வாகனத்தையோ எடுத்துக் கொண்டு வருவது இங்கு வர ஏற்ற சிறந்த வழிமுறையாக இருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed