ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள கல்டாஜி ஒரு ஆன்மீக ஸ்தலமாகும். இங்கு பல கோயில்கள், மாடங்கள் மற்றும் கல்டாஜி வளாகத்திலுள்ள இயற்கை நீரூற்றுகள் ஆகியவை உள்ளன.
மலைப்பாங்கான பிரதேசத்தின் நடுவே இந்த கல்டாஜி ஸ்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள கோயில் சூரியக்கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. திவான் கிரிபரம் என்ற சிகரத்தின் மீது அமைந்துள்ள இந்த கோயிலை நகரத்தின் எல்லாப் பகுதியிலிருந்தும் பார்க்க முடிகிறது.
இளஞ்சிவப்பு கற்களைப்பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலின் சுவர்களில் பல ஓவியங்கள் மற்றும் சிற்பவேலைப்பாடுகளைக் காணலாம்.



Click it and Unblock the Notifications