ஹவா மஹால், ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர் நகரின் பிரபலமான நினைவுச்சின்னமாக திகழும் இந்த ஹவா மஹால் ஒரு கவிஞராகவும் விளங்கிய சவாய் பிரதாப் சிங்மஹாராஜாவால் 1799ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு கற்களால் எழுப்பப்பட்டுள்ள இந்த ஐந்து அடுக்கு மாளிகை ஜோஹரி பஜாருக்கு அருகில் அமைந்துள்ளது.

லால் சந்த் உஸ்தா எனப்படும் விற்பன்னரால் வடிவமைக்கப்பட்ட இந்த மாளிகை 950 ஜன்னல்களைக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள சல்லடைத்துவார ஜன்னல்கள் வழியாக வீதிகளில் நடைபெறும் ஊர்வலங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை அரண்மனைப்பெண்டிர் பாதுகாப்பாக பார்த்து ரசிப்பதற்காகவே இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த மாளிகைக்குள் அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது.

Please Wait while comments are loading...