ஜலானா இயற்கைப்பூங்கா அல்லது நஹார்கர் உயிரியல் பூங்கா என்றழைக்கப்படும் இது பலவகையான காட்டுயிர் அம்சங்கள் மற்றும் தாவர வகைகளைக்கொண்டுள்ளது. நஹார்கர் கோட்டையை ஒட்டி சுமார் 7.2 ச.கி.மீ பரப்பளவுக்கு இந்த காட்டுயிர் பூங்கா பரவியுள்ளது.
இதில் படிகப்பாறைகள் மற்றும் மணற்பாறைகள் இங்கு அதிக அளவில் காணப்படுகின்றன. புலிகள், குரங்குகள் மற்றும் பலவகையான ஊர்வன விலங்குகளை இந்த வனப்பகுதியில் காணலாம்.
உள்நாட்டுப்பறவைகள் மற்றும் பலவிதமான புலம்பெயர் பறவைகளையும் இங்கு பார்க்கலாம். ஜங்கிள் சஃபாரி எனப்படும் காட்டுச்சுற்றுலா செல்வதன் மூலம் பயணிகள் இந்த உயிரியல் பூங்காவின் எழில் அம்சங்களை நன்கு பார்த்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications